தூத்துக்குடியில் புதியதாக veg route காய்கறி கடை திறப்பு

தூத்துக்குடியில் உள்ள எட்டயபுரம் ரோட்டில் புதியதாக (veg Route) வெஜ் ரூட் கடை திறக்கப்பட்டது.

முத்தையாபுரம் உதவி காவலர் மகாராஜன் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார்.

ஷியாம் பிரசாத் ராஜசேகரன் குழுவினரால் துவங்கப்பட்ட veg route காய்கறி நிறுவனம் பல்வேறு மாவட்டங்களில் சிறப்பாக செயல்பட்டு வருகிறது.

இது குறித்து நிறுவனர் ஷியாம் பிரசாத் கூறுகையில்,

2020ம் ஆண்டு veg ரூட் காய்கறி மலிவு விலை விற்பனை கோவையில் தொடங்கப்பட்டது.

இதன் முக்கிய நோக்கமே தூத்துக்குடியில் உள்ள மக்களுக்கு தரமான முறையில் சரியான விலையில் காய்கறிகள்  கிடைக்க வேண்டும் என்பதே,

தமிழகத்தில் உள்ள சென்னை, கோயம்புத்தூர், மதுரை ஆகிய இடங்களில் செயல்பட்டு வரும் இந்நிறுவனம் கோவா, பெங்களூர் போன்ற பெரு இடங்களில் தொடங்கப்பட உள்ளது.

இத்தொழில் மூலம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளிடம் இருந்து தரமான காய்கறிகள், பழங்கள் கீரை வகைகள் மற்றும் இதரபொருட்களை நேரடியாக கொள்முதல் செய்து அதை தரம் பிரித்து மக்களுக்கு சுகாதாரமான முறையில்  கொடுக்கப்படுகிறது. இதனால் மக்களுக்கும் விவசாயிகளுக்கும் எங்கள் நிறுவனம் ஒரு பாலமாக செயல்படுவது மகிழ்ச்சி"

தூத்துக்குடியில் பிறந்து ஜெர்மனியில் தொழில் புரிந்துவரும் விஜய் பிரவின் மகாராஜன் என்பவர் தான் தூத்துக்குடியில் VEGROUTE FRANCHISE  எடுத்துள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் கூறிய அவர், அனைத்து வாடிக்கையாளர்களுக்கும் இன்றிலிருந்து பழங்கள் மற்றும் காய்கறிகளை வீடுகளுக்கே டெலிவரி செய்வதாகவும்,

இலவச டெலிவரி வசதியும் ஆர்டர் செய்ய உடனடியாக Play-store றிலும் App Storeறிலும்  செயலியை பதிவிறக்கம் செய்து காய்கறிகள் மற்றும் பழங்களை பெற்றுக் கொள்ளலாம். என கூறினார்.