தூத்துக்குடி, புதுக்கோட்டை அருகில் உள்ள மங்களகிரி செயின்ட் ஜோசப் மேல் நிலைப்பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது.

தூத்துக்குடி, புதுக்கோட்டை அருகே உள்ள மங்களகிரி செயின்ட் ஜோசப் மேல் நிலைப்பள்ளியில் வருடம் தோறும் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்படுவது வழக்கம்

அதே போல் இந்த ஆண்டு பொங்கல் விழாவினை பள்ளி மாணவ மாணவியர், ஆசிரியர் இணைந்து பொங்கல் வைத்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

நட்டார்குளம் பங்கு தந்தை அம்புறோஸ் அடிகளார் தலைமை ஏற்று மாணவர்கள் மத்தியில் உரையாற்றினார். பள்ளியின் தாளாளரும், முதல்வருமான அருட்தந்தை ரூபர்ட் அனைவரையும் வரவேற்று பேசினார். ஆசிரியர் மெல்றோஸ் ஷிபா நன்றியுரை ஆற்றினார்.

இவ்விழாவின் போது, பொங்கல் சார்பான உரையாடல், பாடல்கள், கவிதைகள், ஆசிரியர்களுக்கான விளையாட்டு போட்டிகள், ஆகிய அனைத்தும் பாரம்பரியத்தை நினைவுட்டின.

பின்னர், அனைவரும் ஒற்றுமையாக சர்க்கரை பொங்கலை அமர்ந்து உண்டு சமத்துவத்தை வெளிப்படுத்தினர்.