தமிழக அரசு  லாட்டரி சீட்டு முறையை கொண்டு வர வேண்டும் என தூத்துக்குடி மாநகர காங்கிரஸ் தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தூத்துக்குடி மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சி. எஸ். முரளிதரன் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது :

இந்தியாவிலே சிறந்த முதல்வராக தமிழக முதல்வர் ஸ்டாலின் திகழ்கிறார் அவரது கடின உழைப்பால் தமிழகத்தை முன்னேற்றி கொண்டு வருகிறார்.

கடந்த 10ஆண்டுகாலம் அ.தி.மு.க ஆட்சியில், எடப்பாடி, ஒ.பி.எஸ் தமிழகத்தை சுரண்டி பாலைவனமாக மாற்றியுள்ளார்.

தற்போது தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் ஆட்சியில் திட்டங்களை நிறைவேற்ற அரசுக்கு போதிய வருமானம் இல்லாததாலும், ஒன்றிய  மோடி அரசின் ஒத்துழைப்பு இல்லாததாலும் அரசு சிரமப்படு வதனால் தமிழக அரசு  லாட்டரி சீட்டு முறையை கொண்டு வந்து தமிழக அரசு நடத்த வேண்டும்.

தமிழகத்தில், கனிம வளங்கள் குவிந்து கிடக்கிறது. கடந்த காலத்தில் ஓரிருவர் செய்த தவறுகளால் முற்றிலுமாக கனவளங்களை ஏற்றுமதி செய்ய தடை செய்திருப்பது அரசுக்கு கிடைக்க வேண்டிய வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

எனவே தமிழக அரசு கனிவளங்களை ஏற்றுமதி செய்ய அதிரடி திட்டங்களை வகுத்து, டெண்டர் மூலம் தனி ஒருவருக்கு மட்டும் அனுமதி வழங்காமல் ஏற்றுமதி உரிமையை பலருக்கு வழங்கினால் அதன் மூலம் அரசுக்கு வருவாய் அதிகரிக்கும். என அம்மனுவில் குறிப்பிட்டு உள்ளார்.