<p><b>எப்போதும் வென்றான் அருகே ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.</b><br></p><p>தூத்துக்குடி மாவட்டம், எப்போதும் வென்றான் அருகேயுள்ள ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பால்பாண்டி மகன் தளவாய்சாமி (50). விவசாயி. அப்பகுதியில் பெய்த கனமழை காரணமாக ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. </p><p>இந்நிலையில், நேற்று தளவாய் சாமி, அங்குள்ள ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளார். சிறிது நேரத்தில் அவரது உடல் கரை ஒதுங்கியது. இதுகுறித்து ஆதனூர் விஏஓ முத்துகண்ணன் அளித்த புகாரின் பேரில்&nbsp; எப்போதும் வென்றான் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.&nbsp;</p>