தூத்துக்குடியில் அதிமுக பொன்விழாவை முன்னிட்டு மத்திய வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞரணி சார்பில் பொதுமக்களுக்கு நலத்திட உதவிகள் வழங்கும் விழா நடைபெறவுள்ளது.

இது தொடர்பாக தூத்துக்குடி மத்திய வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞாணி செயலாளர் திருச்சிற்றம்பலம் தெரிவித்ததாவது :

தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட செயலாளரும், முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.சண்முகநாதன்  வழிகாட்டுதலின் படி மத்திய வடக்கு பகுதி எம்ஜிஆர் இளைஞாணி செயலாளர் திருச்சிற்றம்பலம் ஏற்பாட்டின்படி நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவானது, தூத்துக்குடி வடக்கு ரத வீதியில் உள்ள  D.A. திருமண மண்டபத்தில் வருகிற  26.10.2021 அன்று மாலை 6.00 மணி அளவில் நடைபெறவுள்ளது.

இதில், 170 பெண்களுக்கு சேலை, 50 ஆண்களுக்கு வேஷ்டி 20 அயன் பாகஸ் மற்றும் தையல் மஷின்  உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் பொதுமக்களுக்கு வழங்கப்பட உள்ளது.

அதனைத்தொடர்ந்து, நிகழ்ச்சி முடிந்தவுடன் அனைவருக்கும் D.A. திருமண மண்டபத்தில் இரவு உணவு வழங்கப்படும் என தெரிவித்தார்.