சபரிமலையில் நாள்தோறும் 2,000 பக்தர்களை அனுமதிக்க தேவசம் போர்டு அனுமதி!
நிருபர்
December 02, 2020
சபரிமலையில் நாள்தோறும் 2,000 பக்தர்களை அனுமதிக்க தேவசம் போர்டு அனுமதி!

பம்பை: சபரிமலையில் நாள்தோறும் 2,000 பக்தர்களை அனுமதிக்கலாம் என்று திருவிதாங்கூர் தேவசம் போர்டு அனுமதி வழங்கியுள்ளது.

சபரிமலை ஐயப்பன் கோவில் மண்டலபூஜை, மகரபூஜைகளுக்காக திறக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில் ஆன்லைனில் முன்பதிவு செய்த 1,000 பக்தர்கள் மட்டுமே நாள்தோறும் அனுமதிக்கப்படுகின்றனர்.

மேலும் வார இறுதி நாட்களில் 2,000 பக்தர்கள் ஐயப்பனை தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர். கடந்த காலங்களை ஒப்பிடுகையில் பக்தர்கள் வருகை பெருமளவு குறைந்துவிட்டது. தற்போதைய பக்தர்கள் எண்ணிக்கையானது சொற்ப அளவுதான் எனவும் கூறப்பட்டது.

பெருவழிப்பாதை யாத்திரை, புல்லுமேடு யாத்திரைக்கும் பம்பையில் நீராடவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. கொரோனா இல்லை என்ற சான்றிதழ் இருந்தால்மட்டுமே நிலக்கல்லை தாண்டி பம்பைக்கு செல்ல முடியும் என்கிற நிலை உள்ளது.

மேலும் கொரோனா கால நெருக்கடிகளால் எரிமேலி போன்ற சபரிமலை ஐயப்ப பக்தர்கள் செல்லும் புனித தலங்களும்கூட வெறிச்சோடி கிடக்கின்றன. இதனையடுத்து பக்தர்கள் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

இதனை ஏற்று நாள்தோறும் 2,000 பக்தர்கள் வரையும் வார இறுதி நாட்களில் 3,000 பக்தர்களையும் அனுமதிக்க திருவிதாங்கூர் தேவசம் போர்டு அனுமதி அளித்துள்ளது.