"மகாகவி" பாரதியாரின் நூறாவது நினைவு நாளை முன்னிட்டு அவரது திருவுருவப் படத்திற்கு தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.

யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல்

இனிதாவ தெங்கும் காணோம்.

பாமரராய், விலங்குகளாய், உலகனைத்தும்

இகழ்ச்சிசொலப் பான்மை கெட்டு

நாமமது தமிழரெனக் கொண்டிங்கு

வாழ்ந்திடல் நன்றோ? சொல்லீர்!

தேமதுரத் தமிழோசை உலகமெல்லாம்

பரவும்வகை செய்தல் வேண்டும்.

என தமிழ் மொழியின் சிறப்பையும்....

யாமறிந்த புலவரிலே

கம்பனைப்போல், வள்ளுவர்போல், இளங்கோ வைப்போல்

பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை.

உண்மை, வெறும் புகழ்ச்சியில்லை!

ஊமையராய்ச் செவிடர்களாய்க் குருடர்களாய் வாழ்கின்றோம்; ஒரு சொற் கேளீர்!

சேமமுற வேண்டுமெனில் தெருவெல்லாம்

தமிழ் முழக்கம் செழிக்கச் செய்வீர்!

என தமிழ் புலவர்களையும், புலமைகளையும்....

பார் போற்றும் வகையில் பாடிய "மாகாகவி" பாரதியார், கவிஞர் மட்டும் அல்ல, 1907 ஏப்ரல் மாதம் சென்னையில் " இந்தியா " என்று தொடங்கப்பட்ட வாரத இதழின் ஆசிரியராக பொறுப்பேற்று பத்திரிக்கையாளராக விளங்கிய சிறப்பும் அவருக்கு உண்டு என்பதை இத்தருணத்தில் நினைவு கூர்ந்து பெருமை கொண்டு, ஒவ்வொரு பத்திரிக்கையாளரும் நெஞ்சம் வைத்து போற்றக்கூடிய, மூத்த பத்திரிக்கையாளர் "மாகாகவி" பாரதியாரின்  நூறாவது ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்ற அலுவலகத்தில் அவரது திருஉருவப்படத்திற்கு, பத்திரிக்கையாளர்கள் மலர் தூவி மரியாதை செய்தனர்.

இந்நிகழ்வில், தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்ற கௌரவ ஆலோசகரும், மூத்த செய்தியாளரும், ஜெயா டிவி செய்தியாளருமான அருண், தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்ற தலைவரும் தமிழ் முரசு செய்தியாளருமான சண்முக சுந்தரம், இணைச் செயலாளரும் நியூஸ்  ஜெ செய்தியாளருமான சிதம்பரம், வின் டிவி ஒளிப்பதிவாளர் பேச்சிமுத்து, தமிழக நியூஸ் செய்தியாளர் வள்ளிராஜ், தமிழக நியூஸ் புகைப்பட கலைஞர் நடராஜன், ராஜகமலம் செய்தியாளர் பொன்ராஜ் உள்ளிட்ட மன்ற உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர்.