தமிழ்நாடு முழுவதும் தூத்துக்குடி உட்பட 37 மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் அதிரடியாக இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இது குறித்து தமிழக அரசின் முதன்மை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:

தமிழ்நாடு பள்ளிக்கல்விப்பணியில் முதன்மை கல்வி அலுவலர் மற்றும் அதனையொத்த பணியிடங்களில் பணி புரியும் அலுவலர்களுக்கு நிர்வாக நலன் கருதி பணியிட மாற்றம் வழங்கப்பட்டுள்ளது.

இதன் படி, தமிழ்நாடு முழுவதும் 37 மாவட்ட கல்வி அலுவலர்களை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இதில்,  தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக இருந்த ஞானகௌரி தஞ்சாவூர் மகாராஜா சரபோஜியின் சரஸ்வதி மகால் நூலகம்  மற்றும் ஆய்வு மையம் நிர்வாக அலுவலராகவும்,
விருதுநகர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலராக பணியாற்றி கே.பாலதண் டாயுதபாணி தூத்துக்குடி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் பணி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.