தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த இருந்த மஞ்சள் பறிமுதல் - கடத்தல்காரர்கள் தப்பி ஓட்டம்!
நிருபர்
June 30, 2021
தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு கடத்த இருந்த மஞ்சள் பறிமுதல் - கடத்தல்காரர்கள் தப்பி ஓட்டம்!

தூத்துக்குடி தருவைகுளம் அருகே பட்டின மருதூர் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கடத்த இருந்த ரூபாய் சுமார் 10 லட்சம் மதிப்புள்ள 2.5 டன் எடையுள்ள விரல் மஞ்சள் மற்றும் அதற்கு பயன்படுத்திய படகு, மினி லாரி, பைக்குகள் ஆகியவற்றை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர்.

தூத்துக்குடி தருவைகுளம் அருகே பட்டினமருதூர் கடற்கரையில் இருந்து சட்டவிரோதமாக இலங்கைக்கு மஞ்சள் கடத்தப்படுவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கியூ பிரிவு ஆய்வாளர் விஜய அனிதா, உதவி ஆய்வாளர்கள் வேலாயுதம், ஜீவமணி, வில்லியம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, கடற்கரையில் நின்று கொண்டிருந்த மினி லாரியை சோதனையிட்ட போது அதில் 85 மூடைகளில் மொத்தம் 2.5 டன் மஞ்சள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதன் மதிப்பு சுமார் 10 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.

இதனை அடுத்து, இதனை சட்டவிரோதமாக படகு மூலம் இலங்கைக்கு கடத்த இருந்த மர்ம நபர்கள் போலீசாரைக் கண்டதும் அங்கிருந்து தப்பிச் சென்று விட்டதாக கூறப்படுகிறது.

இதையடுத்து மஞ்சள் மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய கடற்கரையில் நின்று கொண்டிருந்த படகு, லாரி மற்றும் 5 இருசக்கர வாகனங்களை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் தப்பி ஓடியவர்களை பிடிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.