50 நாட்களை கடந்த திமுக ஆட்சி: சீமான் விமர்சனம்
நிருபர்
June 27, 2021
50 நாட்களை கடந்த திமுக ஆட்சி: சீமான் விமர்சனம்

திமுக ஆட்சிப் பொறுப்பேற்று 50 நாட்களை கடந்தும், தமிழகத்தின் பிரச்னைகள் தீர்வதற்கான அறிகுறிகள் இல்லை என நாம் தமிழர்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விமர்சித்திருக்கிறார்.

இது தொடர்பாக ட்வீட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கும் சீமான், “திமுக தான் எல்லாவற்றையும் தீர்க்கும் மாமருந்து; தமிழகத்தின் அத்தனைப் பிரச்னைகளுக்கும் திமுக ஆட்சியமைந்தவுடன் 100 நாட்களுக்குள் தீர்வு எட்டப்படும் என வானளவு அளந்தார்கள். 50 நாட்களைக் கடந்துவிட்டோம். பாதி காலக்கெடு என்னவானது?

தமிழகத்தின் பிரச்சினைகள்? எப்போது எல்லாவற்றையும் தீர்க்கப் போகிறார்கள்? அதற்கான எந்த அறிகுறியும் தென்படவில்லையே! மக்களின் பிரச்னைகளைக் கடிதங்களாய் பெற்ற அப்பெட்டிகள் எங்கே? அதனை எப்போது திறப்பார்கள்? சாவி தொலைந்துவிட்டதா? இல்லை! பெட்டியே தொலைந்துவிட்டதா?” என கேள்வி எழுப்பியிருக்கிறார்.