பசுவந்தனை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு தன்னார்வ நண்பர்கள் மற்றும் இளைஞர்கள் சார்பாக ரூ.1 லட்சத்து 76 ஆயிரம் மதிப்புள்ள மருத்துவ உபகரணங்கள் வழங்கப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் அருகே உள்ள  பசுவந்தனை தன்னார்வ நண்பர்கள் மற்றும் இளைஞர்கள் சார்பில் ரூ.1 லட்சத்து 76 மதிப்புள்ள மருத்துவ உபகரணங்களை விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்கண்டேயன் மருத்துவ அலுவலர் டாக்டர் அன்புமாலதியிடம் வழங்கினார்.

இந்நிகழ்ச்சிக்கு ஓட்டபிடாரம் வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தங்கமணி தலைமை தாங்கினார். துணைத் தலைவர் காசிவிஸ்வநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தார்.

தொடர்ந்து கொரோனா தடுப்பூசி முகாமை சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் தொடங்கி வைத்து, ஆரம்ப சுகாதார நிலையத்தை பார்வையிட்டார். மருத்துவமனை பேறுகால வார்டு மேம்படுத்துவது, மருத்துவமனையை சுற்றிலும் சுற்றுச்சுவர் அமைப்பது குறித்து ஆய்வு மேற்கொண்டார்.

பசுவந்தனை ஆரம்ப சுகாதார நிலையத்தை தரம் உயர்த்தப்பட்ட 30 படுக்கை வசதிகள் கொண்ட ஆரம்ப சுகாதார நிலையமாக மாற்ற மருத்துவ அலுவலரிடம் கருத்துக்களை கேட்டறிந்தார். இதனை தொடர்ந்து பசுவந்தனை கைலாசநாதர் திருக்கோவிலில் ராஜகோபுரம் அமைப்பது குறித்து ஆய்வு செய்தார்.

நிகழ்ச்சியில், விளாத்திகுளம் கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்ன மாரிமுத்து, விளாத்திகுளம் பேரூராடசி செயலாளர் வேலுச்சாமி, வடக்கு மாவட்ட இளைஞ ரணி துணை அமைப்பாளர்கள் இம்மானுவேல், யூனியன் கவுன்சிலர்கள் ராஜேஷ்வேல், வெள்ளைச்சாமி,

பஞ்சாயத்து தலைவர்கள் முத்துக்குமார், லெட்சுமிசிதம்பரம், சண்முகையா, மாரியப்பன், பழனிபாண்டியன் ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய இளைஞரணி அமைப்பாளர் ராதாகிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதிகள் சத்தியராஜன் உட்பட பலர் கலந்து கொண்டனர்