ஊழல் அரசியல்,  குடும்ப அரசியல்,  பரம்பரை அரசியல் செய்யும் கட்சி திமுக. அமைச்சர் சி.வி சண்முகம் பேட்டி

விழுப்புரத்தில் சட்டத்துறை அமைச்சர் சண்முகம் நேற்று ( 23.11.2020 ) நிருபர்களிடம் கூறியதாவது :

திமுக தலைவர் ஸ்டாலின் கூறுவது அவருக்கே தெரியாது. ஊழல் அரசியல்,  குடும்ப அரசியல்,  பரம்பரை அரசியல் செய்யும் கட்சி திமுக. அதனால் அதிமுக பற்றி பேச எந்த அருகதையும் தகுதியும் இல்லை.

அதிமுகவிலும்,  பாஜகவிலும்,  குடும்ப அரசியல் பரம்பரை அரசியல் நடத்தவில்லை. ஆனால், காங்கிரஸில் நேரு முதல் ராகுல் வரை பரம்பரையாக குடும்ப அரசியலை 50 ஆண்டுகளுக்கும் மேலாக நடத்தி வருகின்றனர்.

டெல்லி ஐகோர்ட்டில் 2ஜி  ஸ்பெக்டரம் ஊழல் வழக்கு நடந்து வருகிறது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் தண்டனை பெறுவது உறுதி. நாங்கள் யாருடன் கூட்டணி வைத்தால் ஸ்டாலினுக்கு ஏன் வயிற்றெரிச்சல்.

பிரதமர் மோடி ஆட்சியில் மீனவர்கள் சுதந்திரமாக கடலில் சென்று மீன் பிடித்து வருகின்றனர். அந்த அளவுக்கு அமைதியாக ஆட்சி நடந்து வருகிறது இவ்வாறு அவர் கூறினார்.