விநாயகர் 108 போற்றி துதியை பாட ; நம் காரிய தடைகள் நீங்கும்!
நிருபர்
November 12, 2020
விநாயகர் 108 போற்றி துதியை நாம் தினமும் சொல்லி வர நம் காரிய தடைகள் நீங்கி,செயல்களில் வெற்றி கிடைக்கும்.உங்களின் வல்வினைகள் நீங்கி நல்லருள் பெறலாம். ஓம் விந...

விநாயகர் 108 போற்றி துதியை நாம் தினமும் சொல்லி வர நம் காரிய தடைகள் நீங்கி,செயல்களில் வெற்றி கிடைக்கும்.உங்களின் வல்வினைகள் நீங்கி நல்லருள் பெறலாம்.

ஓம் விநாயகனே போற்றி

ஓம் வினைகள் தீர்ப்பவனே போற்றி

ஓம் அரசமரத்தடி அமர்ந்தவனே போற்றி

ஓம் அகந்தை அழிப்பவனே போற்றி

ஓம் அமிர்த கணேசா போற்றி

ஓம் அறுகினில் மகிழ்பவனே போற்றி

ஓம் அச்சம் தவிர்ப்பவனே போற்றி

ஓம் ஆனை முகத்தோனே போற்றி

ஓம் ஆறுமுகன் சோதரணே போற்றி

ஓம் ஆதி மூலமே போற்றி ஓம் ஆனந்த உருவே போற்றி

ஓம் ஆபத் சகாயா போற்றி

ஓம் இமவான் சந்ததியே போற்றி

ஓம் இடரைக் களைவோனே போற்றி

ஓம் ஈசன் மகனே போற்றி

ஓம் ஈகை உருவே போற்றி

ஓம் உண்மை வடிவே போற்றி

ஓம் உலக நாயகனே போற்றி

ஓம் ஊறும் களிப்பே போற்றி

ஓம் ஊழ்வினை அறுப்பவனே போற்றி

ஓம் எளியவனே போற்றி

ஓம் எந்தையே போற்றி

ஓம் எங்குமிருப்பவனே போற்றி

ஓம் எருக்கு அணிந்தவனே போற்றி

ஓம் ஏழை பங்காளனே போற்றி

ஓம் ஏற்றம் அளிப்பவனே போற்றி

ஓம் ஐயனே போற்றி ஓம் ஐங்கரனே போற்றி

ஓம் ஒப்பிலாதவனே போற்றி

ஓம் ஒதுக்க முடியாதவனே போற்றி

ஓம் ஒளிமய உருவே போற்றி

ஓம் ஒளவைக் கருளியவனே போற்றி

ஓம் கருணாகரனே போற்றி

ஓம் கரணத்தில் மகிழ்பவனே போற்றி

ஓம் கணேசனே போற்றி

ஓம் கணநாயகனே போற்றி

ஓம் கண்ணிற்படுபவனே போற்றி

ஓம் கலியுக நாதனே போற்றி

ஓம் கற்பகத்தருவே போற்றி

ஓம் கந்தனுக்கு தவியவனே போற்றி

ஓம் கிருபாநிதியே போற்றி

ஓம் கீர்த்தி அளிப்பவனே போற்றி

ஓம் குட்டில் மகிழ்பவனே போற்றி

ஓம் குறைகள் தீர்ப்பவனே போற்றி

ஓம் குணநிதியே போற்றி

ஓம் குற்றம் பொறுப்போனே போற்றி

ஓம் கூவிட வருவோய் போற்றி

ஓம் கூத்தன் மகனே போற்றி

ஓம் கொள்ளை கொள்வோனே போற்றி

ஓம் கொழுக்கட்டைப் பிரியனே போற்றி

ஓம் கோனே போற்றி

ஓம் கோவிந்தன் மருமகனே போற்றி

ஓம் சடுதியில் வருபவனே போற்றி

ஓம் சங்கரன் புதல்வனே போற்றி

ஓம் சங்கடஹரனே போற்றி

ஓம் சதுர்த்தி நாயகனே போற்றி

ஓம் சிறிய கண்ணோனே போற்றி

ஓம் சித்தம் கவர்ந்தோனே போற்றி

ஓம் சுருதிப் பொருளே போற்றி

ஓம் சுந்தரவடிவே போற்றி

ஓம் ஞாலம் காப்பவனே போற்றி

ஓம் ஞான முதல்வனே போற்றி

ஓம் தந்தம் உடைந்தவனே போற்றி

ஓம் தந்தத்தாற் எழுதியவனே போற்றி

ஓம் தும்பிக்கை உடையாய் போற்றி

ஓம் துயர் துடைப்பவனே போற்றி

ஓம் தெருவெலாம் காப்பவனே போற்றி

ஓம் தேவாதி தேவனே போற்றி

ஓம் தொந்தி விநாயகனே போற்றி

ஓம் தொழுவோ நாயகனே போற்றி

ஓம் தோணியே போற்றி

ஓம் தோன்றலே போற்றி

ஓம் நம்பியே போற்றி

ஓம் நாதனே போற்றி

ஓம் நீறணிந்தவனே போற்றி

ஓம் நீர்க்கரையமர்ந்தவனே போற்றி

ஓம் பழத்தை வென்றவனே போற்றி

ஓம் பாரதம் எழுதியவனே போற்றி

ஓம் பரம்பொருளே போற்றி

ஓம் பரிபூரணனே போற்றி

ஓம் பிரணவமே போற்றி

ஓம் பிரம்மசாரியே போற்றி

ஓம் பிள்ளையாரே போற்றி

ஓம் பிள்ளையார்பட்டியானே போற்றி

ஓம் பிறவிப்பிணி தீர்ப்பவனே போற்றி

ஓம் பிள்ளைகளை ஈர்ப்பவனே போற்றி

ஓம் புதுமை வடிவே போற்றி

ஓம் புண்ணியனே போற்றி

ஓம் பெரியவனே போற்றி

ஓம் பெரிய உடலோனே போற்றி

ஓம் பேரருளாளனே போற்றி

ஓம் பேதம் அறுப்போனே போற்றி

ஓம் மஞ்சளில் இருப்பவனே போற்றி

ஓம் மகிமையளிப்பவனே போற்றி

ஓம் மகாகணபதியே போற்றி

ஓம் மகேசுவரனே போற்றி

ஓம் முக்குறுணி விநாயகனே போற்றி

ஓம் முதலில் வணங்கப்படுவோனே போற்றி

ஓம் முறக்காதோனே போற்றி

ஓம் முழுமுதற்கடவுளே போற்றி

ஓம் முக்கணன் மகனே போற்றி

ஓம் முக்காலம் அறிந்தானே போற்றி

ஓம் மூத்தோனே போற்றி

ஓம் மூஞ்சுறு வாகனனே போற்றி

ஓம் வல்லப கணபதியே போற்றி

ஓம் வரம்தரு நாயகனே போற்றி

ஓம் விக்னேஸ்வரனே போற்றி

ஓம் வியாஸன் சேவகனே போற்றி

ஓம் விடலைக்காய் ஏற்பவனே போற்றி

ஓம் வெற்றியளிப்பவனே போற்றி !