எங்களைப்பற்றி
தொழில்நுட்ப வளர்ச்சியின் காரணமாகவும் , நவீன காலத்தை கருத்தில் கொண்டும், சமூக மாற்றத்தின் தேவையை புரிந்து கொண்டு, நன்மை தரும் வகையிலான அனைத்து விதமான செய்திகளை, உடனுக்குடனும், உண்மையாகவும் வழங்குவதற்காக தொடங்கப்பட்ட பக்கம் தான் இந்த விளாசல் நீயூஸ் என்கிற இணையதள செய்தி பக்கம் ஆகும்.
உள்ளூரில் தொடங்கி உலகம் வரையில் சமுதாயம், சமயம், அரசியல், பொருளாதாரம், பண்பாடு, தேசியம், உள்ளிடவைகள் தொடர்பாக நடைபெறும் அனைத்து விதமான நிகழ்வுகளையும் சேகரித்து அதனை உண்மையாகவும், உடனுக்குடனும், விருப்பு வெறுப்பின்றி, எந்தவொரு சார்பு நிலையையும் எடுக்காமல் அறத்தின் பக்கம் நின்று பார்வைக்கு வழங்குவதே எங்களது விருப்பமும் பணியாகவும் கொண்டுள்ளோம்.
அனைத்து விதமான செய்திகளை அச்சமின்றி மனசாட்சிக்கு உட்பட்டு, சிதைக்காமல், மறைக்காமல், மாறுபட்டு கூறாமல் பார்வையாளர்களுக்கு தருவதே எமது நோக்கம் ஆகும்.
மனித இனத்திற்கிடையே மத நல்லிணக்கத்தையும், வகுப்புவாத வேற்றுமைகளைக் களைந்தும், ஏற்ற தாழ்வுகளுக்கிடையே உள்ள இடைவெளிகளைக் குறைத்தும், சமதர்ம ஜனநாயக பொதுவுடமை சமுதாயம் காண வழிவகை செய்யும் தளமாக இவை பொதுநல பொறுப்புணர்வோடு செயல்படுபவையாகும் என்பதை உளச்சான்றோடு கூறிக்கொள்கிறோம்.